• Tue. Oct 13th, 2026

24×7 Live News

Apdin News

'தேஜஸ்' போர் விமானத்தில் தனது கடைசி பயணத்தை மேற்கொண்ட இந்திய விமானப்படை தளபதி

Byadmin

Oct 13, 2026


இந்த மாத இறுதியில் ஓய்வுபெறவுள்ள இந்திய விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘தேஜஸ்‘ போர் விமானத்தில் தனது கடைசி பயணத்தை (sortie) மேற்கொண்டதாக விமானப்படை தெரிவித்தது.

எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட பதிவில், ஜோத்பூர் விமானப்படை தளத்தில் நடைபெற்ற ‘தரங் சக்தி’ பயிற்சியின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட இந்த பயணம், எப்போதும் முன்னின்று வழிநடத்துவதை நம்பும் ஒரு போர் விமானியின் மனப்பான்மையை வெளிப்படுத்துவதாக இந்திய விமானப்படை கூறியது.

இந்த பயணத்தின் காணொளி மற்றும் பயிற்சியின் போது நட்பு நாடுகளின் விமானங்கள் மற்றும் ‘சூர்யகிரண்’ ஏரோபாட்டிக் குழுவினருடன் இணைந்து அவர் விமானத்தை இயக்கும் புகைப்படங்களையும் விமானப்படை பகிர்ந்து கொண்டது. ஏ.பி. சிங் அக்டோபர் 31 அன்று ஓய்வு பெறுகிறார்.

எக்ஸ் தள பதிவு:

“ஒரு இறுதி போர் விமான பயணம். வாழ்நாள் முழுவதுமான ஆர்வம். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் விமானத்தை இயக்கியபடி, விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் தனது கடைசி போர் விமான பயணத்திற்காக வானில் பறந்தார்.

பறப்பதன் மீதான ஆழ்ந்த ஆர்வத்தாலும், நாட்டிற்கு சேவையாற்றுவதில் கொண்ட தளராத அர்ப்பணிப்பாலும் வடிவமைக்கப்பட்ட அவரது சிறப்பான பணிவாழ்வில் இது ஒரு முக்கிய தருணமாகும்,” என்று அப்பதிவு தெரிவித்தது.

“ஒரு அத்தியாயம் முடிவுக்கு வந்தாலும், அந்த ஆர்வம் குறையாமல் தொடர்கிறது. வானம் ஒருவேளை பறத்தல் சார்ந்த அத்தியாயத்தின் முடிவை குறிக்கலாம், ஆனால் நாட்டிற்கான சேவையின் நோக்கம் தொடர்கிறது. ஒருமுறை போர் விமானியாக இருந்தால், எப்போதும் போர் விமானிதான்,” என்று விமானப்படை கூறியது.

தரங் சிங் பயிற்சி:

செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 12 வரை ஜோத்பூர் விமானப்படை தளத்தில் நடைபெற்ற ‘தரங் சக்தி’ பயிற்சியின் இரண்டாவது பதிப்பில் ஏழு வெளிநாடுகள் பங்கேற்றன; இதில் அமெரிக்காவின் பன்முக செயல்பாடு கொண்ட ‘ஸ்டெல்த்’ போர் விமானமான எஃப்-35 (F-35) முதன்முறையாக பங்கேற்றது.

அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, வங்கதேசம், இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகியவை இதில் பங்கேற்ற ஏழு நாடுகளாகும்.

நாட்டின் பாதுகாப்பு வலிமையை வெளிப்படுத்துவதையும், கூட்டு செயல்பாட்டு திறனை வளர்ப்பதற்கான தளத்தை அமைப்பதையும் நோக்கமாக கொண்ட இந்த பயிற்சியின் போது, ​​இந்தியா தனது முக்கிய விமானப்படை சொத்துக்களை காட்சிப்படுத்தியது.

By admin