• Thu. Oct 29th, 2026

24×7 Live News

Apdin News

தேனி சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகள் – 2 நாட்களில் அனைவரும் பிடிபட்டது எப்படி?

Byadmin

Oct 29, 2026


தேனி சிறையில் இருந்து கைதிகள் தப்பித்த சம்பவம்

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தேனி மாவட்டத்தின் தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் இருந்து கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி இரவு 17 கைதிகள் ஒரே சமயத்தில் தப்பிச் சென்ற நிகழ்வு இந்தியா முழுவதும் பேசும்பொருளான நிலையில், அந்த ’17 கைதிகளையும் இரண்டு நாட்களுக்குள் பிடித்துவிட்டதாக’ தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் தொடக்கம் முதல் இறுதி வரை நடந்தது என்ன?

கைதிகள் தப்பித்தது எப்படி?

தேனி மாவட்டம் தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறை 2019-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

இச்சிறைச்சாலையின் கைதிகள் தங்கும் கொள்ளளவு என்பது 200 ஆகும். ஆனால் இங்கு 334 பேர் அடைக்கப்பட்டிருந்ததாக சிறைத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கூடுதலாக 134 கைதிகள் என்பது அனுமதிக்கப்பட்ட கொள்ளளவை விட அதிகம்.



By admin