• Thu. Oct 29th, 2026

24×7 Live News

Apdin News

யோகி பாபுவின் ‘அர்ஜுனன் பேர் பத்து’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

Byadmin

Oct 29, 2026


தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘அர்ஜுனன் பேர் பத்து’ படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ரா. ராஜ்மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அர்ஜுனன் பேர் பத்து’ திரைப்படத்தில் யோகி பாபு, அனாமிகா மஹி, காளி வெங்கட், அருள்தாஸ், ‘அயலி’ மதன், சுப்ரமணியம் சிவா, மைனா நந்தினி, சௌந்தர்யா, சென்ட்ராயன், ஹலோ கந்தசாமி, பவா லட்சுமண், ரஞ்சன் குமார், இயக்குநர் லெனின் பாரதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். சர்வைவல் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தேவ் சினிமாஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியாகி படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சரக்கு போக்குவரத்து வாகனத் திருட்டு பின்னணியில் உருவாகியுள்ள ‘அர்ஜுனன் பேர் பத்து’ திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் பாரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

The post யோகி பாபுவின் ‘அர்ஜுனன் பேர் பத்து’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு appeared first on Vanakkam London.

By admin