• Mon. Nov 9th, 2026

24×7 Live News

Apdin News

தேனி: பட்டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்தவர்களை கேள்வி கேட்ட காவல்துறை அதிகாரி மரணம் – 3 பேர் கைது

Byadmin

Nov 9, 2026


தேனி: பட்டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்தவர்களைத் தட்டிக்கேட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மரணம் - 3 பேர் கைது

படக்குறிப்பு, தேனியில் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்த இளைஞர்களைத் தட்டிக்கேட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்

    • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தேனி மாவட்டத்தில் சாலையை மறித்துப் பட்டாசு வெடித்து, சமூக ஊடகங்களுக்காக ரீல்ஸ் எடுத்துக்கொண்டிருந்த இளைஞர்களைக் கேள்வி கேட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக மூன்று பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

உயிரிழந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமாரின் (57) குடும்பத்தினருக்கு ரூ.40 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

தேனியில் நடந்தது என்ன?

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்து, தேனி காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாற்றுப் பணியில் இருந்தவர் சிறப்பு உதவி ஆய்வாளர் கி. செந்தில்குமார்.

தேனி அல்லிநகரம் காந்திநகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த அவர், நவம்பர் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு தனது பணியை முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.



By admin