• Sun. Oct 18th, 2026

24×7 Live News

Apdin News

தேவாவின் கானா பிம்பத்தை உடைத்த 7 மெலடி பாடல்கள் எவை?

Byadmin

Oct 18, 2026


'நான் இசையமைத்தேன் என்றால் நம்பமாட்டார்கள்'- தேவாவின் கானா பிம்பத்தை உடைத்த 7 மெலடி பாடல்கள்

1992-ஆம் ஆண்டு கவிதாலயா தயாரிப்பு நிறுவனம் தமிழ் சினிமாவின் இரண்டு முக்கியமான திரைப்படங்களைத் தயாரித்தது.

ஒன்று மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமான ‘ரோஜா’ திரைப்படம். மற்றொன்று சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில், தேவாவின் இசையில் வெளியான ‘அண்ணாமலை’.

இரண்டு திரைப்படங்களின் பாடல்களுமே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன.

குறிப்பாக, ‘அண்ணாமலை’ திரைப்படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய ‘வந்தேன்டா பால்காரன்’ பாடலின் வெற்றி, அதன்பிறகு வெளியான ‘பாட்ஷா’, ‘முத்து’, ‘அருணாச்சலம்’, ‘படையப்பா’, ‘சந்திரமுகி’ என எஸ்.பி.பி குரலில் ஒலிக்கும் பாடலோடு ரஜினிகாந்த் திரையில் அறிமுகமாகும் வழக்கத்தை வாடிக்கையான ஒன்றாக மாற்றியது.

‘அண்ணாமலை’ திரைப்படத்தில் தேவாவின் பின்னணி இசையோடு வரும் ‘சூப்பர் ஸ்டார் ரஜினி’ என்ற பிரபலமான ‘டைட்டில் கார்டு’ பல வருடங்களாக தொடர்ந்து ரஜினிகாந்த் திரைப்படங்களில் இடம்பெறுகிறது, சமீபத்திய வெளியீடான ‘ஜெயிலர் 2’ வரை. அத்திரைப்படங்களுக்கு வேறு யார் இசையமைத்திருந்தாலும், தேவாவின் இசையே திரையரங்கத்தில் ரஜினி ரசிகர்களின் முதல் ஆரவாரத்திற்கு காரணமாக உள்ளது.

By admin