• Sun. Oct 18th, 2026

24×7 Live News

Apdin News

மின் உற்பத்தி நிலையங்கள் செயலிழப்பு வதந்தி மறுப்பு

Byadmin

Oct 18, 2026


முற்றிலுமாக மறுத்துள்ளதுடன், எந்தவொரு மின்னுற்பத்தி நிலையங்களின் மின்பிறப்பாக்கிகளும் செயலிழக்கவில்லை என உறுதிப்படுத்தியுள்ளார்.

மின்கட்டமைப்பு செயலிழப்பதற்கு முன்னர் இயங்கிக் கொண்டிருந்த அனைத்து நீர்மின் நிலையங்களும் தொடர்ந்தும் இயங்கும் நிலையிலேயே இருப்பதாகவும், தற்போது மின் விநியோகத்தை மீள வழங்குவதற்காக அவை பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர் தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவன்றி, கட்டமைப்புத் தோல்வியைத் தொடர்ந்து நிலையான வழிமுறைகளின்படியே  நொரொச்சோலை நிலக்கரி மின் நிலையம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மதியம் முதல் பகுதி பகுதியாக மின் விநியோகம் வெற்றிகரமாக மீள வழங்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று சனிக்கிழமை (17) மாலை 6.30 மணியளவில் தேசிய மின்சாரக் கட்டமைப்பு முழுமையாக இயல்பு நிலைக்குக் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு தழுவிய அளவிலான மின்சாரத் தடையைத் தொடர்ந்து பல மின்னுற்பத்தி நிலையங்களின் மின்பிறப்பாக்கிகள் செயலிழந்துள்ளதாக  பரவிய வதந்திகளுக்கே இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

By admin