ஸ்பெயின் அணியின் 7 கோல் வாய்ப்புகளை தனி ஆளாய் தடுத்து ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்த 40 வயதான கோல் கீப்பர் வோசின்யா தான் இணையத்தில் தற்போது வைரல்.
Vozhinha… இன்றைக்கு தேதியில் உலகில் இருக்க Football ரசிகர்கள் எல்லோரும் ஆர்வமாவும் அதிசயமாவும் தேடும் ஒரு பேர்.
மேற்கு ஆப்பிரிக்காவின் கடல் பகுதியில் இருக்க Cape Verde என்கின்ற சின்ன தீவு நாட்டை சேர்ந்த Football Goalkeeper ஆன Vozhinha நேற்று முன்தினம் நடந்த 2026 FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், புகழ்பெற்ற ஸ்பெயின் நாட்டோட கால்பந்து அணிய ஒரு கோல் கூட அடிக்க விடாம தடுத்து போட்டியை ட்ரா கொண்டு வந்து மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தினார்.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், Vozhinha விளையாடுன இந்த கால்பந்து போட்டி தான் அவரோட முதல் உலகக்கோப்பை கால்பந்து போட்டி. Vozhinha-க்கு மட்டும் இல்லை, அவர் விளையாடிய Cape Verde நாட்டோட கால்பந்து அணிக்கே இதுதான் முதல் உலகக்கோப்பை போட்டி. அறிமுகமான முதல் படம் Blockbuster ஆகுற மாதிரி, முதல்முறையா நின்ன தேர்தல்லையே ஜெயிச்ச மாதிரி ஒரு வரலாற்று சாதனையை படைச்சிருக்காரு Vozhinha-வும் அவரோட Cape Verde கால்பந்து அணியும்.