• Sat. Nov 28th, 2026

24×7 Live News

Apdin News

தொகுதி மறுவரையறை மசோதா: முன்பு எதிர்த்த திமுக இப்போது ஆதரிப்பது ஏன்? ஸ்டாலின் முடிவின் பின்னணி

Byadmin

Nov 28, 2026


தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்களின் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தொகுதி மறுவரையறை மசோதாவின் புதிய வரைவுக்கு ஆதரவளிப்பதாக திமுக அறிவித்துள்ளது.

இதை விளக்கி செய்தியாளர்களிடம் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, “1971இல் திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கையை நிர்ணயித்தன. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு குறிப்பிட்ட பங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அது மாறக்கூடாது. இப்போது இரண்டு இடங்கள் குறையவில்லை, கூடுதல் இடங்கள் தானே கிடைக்கப் போகின்றன” என்று பேசினார்.

மேலும், “கடந்த மறுவரையறையின்போது தமிழ்நாட்டின் பங்கு 7.18. அதே பங்களிப்பு தொடர வேண்டும் என்பதுதான் நியாயமான தொகுதி மறுவரையறை. காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் இதைத்தான் கோரின. இது இன்று எடுக்கப்பட்ட முடிவல்ல. திமுக ஆட்சியில் இருந்தபோது இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய அளவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றியது” என்று கூறினார்.

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு

படக்குறிப்பு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா

கூடுதலாக, “அந்தத் தீர்மானத்திற்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தவெக அரசு கொண்டு வந்த தீர்மானத்தின்போதும், அதே பங்களிப்பு குறையக்கூடாது என்கிற கோரிக்கையைத்தான் வலியுறுத்தினோம், அதன் அடிப்படையில் நிலையான முடிவை எடுத்துள்ளோம். தேசிய அளவிலும் சட்டப்பேரவையிலும் எடுத்த முடிவுகளின் அடிப்படையில்தான் இந்த முடிவை எடுத்துள்ளோம்” என்றும் ஆ.ராசா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் வரும் நவம்பர் 30ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மக்களவை நவம்பர் 30ஆம் தேதியும், மாநிலங்களவை டிசம்பர் 2ஆம் தேதியும் மீண்டும் கூடவுள்ளன.

By admin