• Sat. Nov 28th, 2026

24×7 Live News

Apdin News

உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் வாழும் பெருந்தலைவனுக்கும் ஓக்ஸ்போட்டில் நினைவஞ்சலி

Byadmin

Nov 28, 2026


பிரித்தானியாவின் ஓக்ஸ்போட் பகுதியில் உலகத் தமிழருக்குச் சொந்தமான நிலத்தில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று வளாகத்தில், 26.11.2026 அன்று நடைபெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வில், தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினரின் உருவப்படத்திற்கும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

உலகத் தமிழர்களின் அரசியல், வரலாற்று மற்றும் தேசிய நினைவுகளில் ஆழமாகப் பதிந்துள்ள தலைவரின் உருவப்படம், நிகழ்வு வளாகத்தில் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. மலர் மாலையால் அலங்கரிக்கப்பட்ட உருவப்படத்தின் முன்னால் நினைவுச் சுடர்களும் தீபங்களும் ஏற்றப்பட்டிருந்தன. தலைவருடன் அவரது குடும்பத்தினரின் உருவப்படமும் இடம்பெற்றிருந்தமை நிகழ்வின் தனித்துவமான அம்சமாக அமைந்தது.

மாவீரர் நாள் என்பது போரில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் நாளாக மட்டுமன்றி, ஈழத் தமிழர்களின் அரசியல் வரலாறு, இழப்புகள், அர்ப்பணிப்புகள் மற்றும் தேசிய நினைவுகளை மீட்டெடுக்கும் நாளாகவும் விளங்குகிறது. அந்த வகையில், மாவீரர்களின் நினைவுகளுடன் தலைவரினதும் அவரது குடும்பத்தினரினதும் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டமை புலம்பெயர் தமிழர்களின் வரலாற்று நினைவுகளின் தொடர்ச்சியை வெளிப்படுத்துவதாக அமைந்தது.

தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர் நினைவேந்தல்கள் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், ஓக்ஸ்போட் உலகத் தமிழர் வரலாற்று வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு, தமிழர்களின் கூட்டு நினைவுகளையும் வரலாற்றுப் பற்றுறுதியையும் மீண்டும் வெளிப்படுத்திய நிகழ்வாகப் பதிவானது.

அமெரிக்க கடற்படை முற்றுகை குறித்து கவலையில்லை; தற்போதைய பொருளாதார நிலையே முக்கியம் - ஈரான்

The post உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் வாழும் பெருந்தலைவனுக்கும் ஓக்ஸ்போட்டில் நினைவஞ்சலி appeared first on Vanakkam London.

By admin