• Sun. Nov 29th, 2026

24×7 Live News

Apdin News

தொகுதி மறுவரையறை மசோதா: ஸ்டாலினைச் சந்திக்க சென்னை வரும் சோனியா, ராகுல் காந்தி

Byadmin

Nov 29, 2026


திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசுவதற்காக மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் சென்னை செல்கின்றனர் (கோப்புப் படம்)

படக்குறிப்பு, (கோப்புப் படம்)

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக அரசியல் பரபரப்பு நீடிக்கும் நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைச் சமாதானப்படுத்தும் முயற்சியாகச் சென்னை வருகின்றனர்.

இதற்கிடையில் தமிழ்நாட்டின் நலனையும் தமிழ்மக்களின் நலனையும் முதன்மையாகக் கருத்தில் கொண்டே ஒவ்வொரு முடிவையும் திமுக எடுத்துள்ளதாக கூறியுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், இந்த பாதையில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.

மத்திய பாஜக அரசு கொண்டு வரும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவளிப்பதாக திமுக அறிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை சென்னைக்குப் புறப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‘பார்க்கலாம்’ என்று மட்டும் கூறினார்.

ராகுல் காந்தியும் எக்ஸ் தளத்தில் இதுகுறித்துத் தகவல் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைச் சந்திப்பதற்காகத் தான் சென்னை செல்வதாக அவர் கூறியுள்ளார்.

By admin