7
தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் எதிர்வரும் 10ஆம் திகதி முதல்வர் விஜய் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் அவரது முதல் வெளிநாட்டு பயணமாக இது அமைந்துள்ளது.
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு, தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
கடந்த மாதம் சென்னையில் ‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு – 2026’ நடைபெற்றது.
முதல்வர் விஜய் தலைமையிலான இந்த மாநாட்டில் ரூ.67,452 கோடிக்கு 97 முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக தகவல்.
இந்த மாநாட்டில் தமிழகத்தை அடுத்த 10 ஆண்டுகளில் (2036) 1.5 ட்ரில்லியன் டொலர் பொருளாதாரமாக மாற்றுவது தங்கள் இலக்கு என்று தமிழக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்ததிருந்தார்.
அந்த வகையில், எதிர்வரும் 10ஆம் திகதி மாநிலத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதல்வர் விஜய் இங்கிலாந்துக்கு பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தப் பயணத்தில் பல்வேறு நிறுவன பிரதிநிதிகளை அவர் சந்தித்து, முதலீடுகளை ஈர்க்க உள்ளார். அவருடன் தொழில் துறை அதிகாரிகளும் பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
செப்டம்பர் 16ஆம் திகதி வரையில் முதல்வர் விஜய்யின் இங்கிலாந்துப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது.