அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் அல்காரஸ், சிட்சிபாஸ் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
இன்று நடைபெற்ற போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் நீண்ட நாளுக்குப் பிறகு களமிறங்கினார். அவர் ரஷியாவின் ரோமன் சபியுலின் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.