தோனி – அஜித் சந்திப்பு: காவியா – அனிருத் திருமண வரவேற்பில் கவனம் ஈர்த்த புகைப்படங்கள்
பிரசுரிக்கப்பட்டது
இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவியா மாறன் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்வில் மணமக்களைத் தாண்டி மேலும் சில விஷயங்கள் கவனம் பெற்றுள்ளன.
குறிப்பாக, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்கள், அவர்களின் வருகை, பிரபலங்களுக்கு இடையிலான சந்திப்புகள், மேடையில் நடைபெற்ற சுவாரஸ்யமான தருணங்கள் எனப் பல விஷயங்கள் பேசுபொருளாகியுள்ளன.
சென்னையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவியா மாறன் தம்பதியின் இரண்டாவது நாள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நடிகர்கள் அஜித் குமார், சிலம்பரசன், சிவகார்த்திகேயன், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா, நடிகைகள் நயன்தாரா, ராஷ்மிகா மந்தனா, பூஜா ஹெக்டே, இயக்குநர்கள் ஷங்கர், அட்லீ, லோகேஷ் கனகராஜ், நெல்சன், விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தனது மனைவி சாக்ஷியுடன் பங்கேற்றார். இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தது தோனியும் நடிகர் அஜித் குமாரும் சந்தித்துக் கொண்ட தருணம்தான்.
இருவரும் நேரில் சந்தித்துக் கட்டியணைத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
மணமகன் வீட்டார் தரப்பில் பங்கேற்றிருந்த நடிகர் ரஜினிகாந்துடன் தோனி மற்றும் அஜித் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு