• Mon. Oct 19th, 2026

24×7 Live News

Apdin News

‘நகைச்சுவையாக பேசி இயல்பாக இருப்பார்கள்’ – மனச்சோர்வின் 7 கவனிக்கப்படாத அறிகுறிகள் இவைதான்

Byadmin

Oct 19, 2026


“வெளியில் மகிழ்ச்சியாக இருப்பதைப் போல தோன்றினாலும், உள்ளுக்குள் மனச்சோர்வுடனும் துயரத்துடனும் இருப்பதையே இது குறிக்கிறது” என்கிறார் பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மனநல ஆராய்ச்சியாளர் முனைவர் ஒலிவியா ரீம்ஸ்.

படக்குறிப்பு, ‘புன்னகைக்கும் மனச்சோர்வு’ என்பது அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ நோயறிதல் அல்ல. இருப்பினும், கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தச் சொல்லைத் தேடுபவர்களின் எண்ணிக்கை 50% அதிகரித்துள்ளது.

    • எழுதியவர், இசபெல் ஷா
    • பதவி, உலகளாவிய சுகாதாரம்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

மனச்சோர்வால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கற்பனை செய்து பாருங்கள். படுக்கையிலிருந்து எழுந்திருக்கக்கூட அவர் சிரமப்படுவதாக நீங்கள் நினைக்கலாம்.

ஒருவேளை, அவர் அடிக்கடி அழலாம், நண்பர்களிடமிருந்து விலகி இருக்கலாம் அல்லது அன்றாடப் பணிகளைச் செய்து முடிப்பதற்குக்கூட போதுமான ஆற்றல் இல்லாமல் இருக்கலாம்.

ஆனால், அதே நபர் இரவு உணவின்போது நகைச்சுவையாகப் பேசுவது, பரபரப்பான சமூக வாழ்க்கையைச் சமாளிப்பது, வேலையில் சிறந்து விளங்குவது போன்றவற்றை நீங்கள் கற்பனை செய்து பார்க்க மாட்டீர்கள்.

ஆனால், ‘புன்னகை மனச்சோர்வு’ (Smiling Depression) என்று அழைக்கப்படும் மனநிலையைக் கொண்டவர்களிடம், இதுபோன்ற நிலைதான் காணப்படலாம்.

சில நேரங்களில், இதில் ஏமாற்றப்படுபவர் நண்பராகவோ, துணையாகவோ அல்லது உடன் பணிபுரிபவராகவோ இருக்க மாட்டார். அது நீங்களாகக் கூட இருக்கலாம்.

By admin