• Wed. Jun 24th, 2026

24×7 Live News

Apdin News

நடன மங்கை சிலை குறித்து சர்ச்சை எழுவது ஏன்? அச்சிலை எங்கே உள்ளது?

Byadmin

Jun 24, 2026


மொஹஞ்சதாரோவின் இந்தச் சிறிய 'நடன மங்கை' சிலை சுமார் 10 சென்டிமீட்டர் உயரம் கொண்டது.

பட மூலாதாரம், NCERT

படக்குறிப்பு, மொஹஞ்சதாரோவின் இந்தச் சிறிய ‘நடன மங்கை’ சிலை சுமார் 10 சென்டிமீட்டர் உயரம் கொண்டது.

மொஹஞ்சதாரோவின் ‘நடன மங்கை’ தற்போது செய்திகளில் இடம்பிடித்துள்ளது.

வெண்கலத்தால் செய்யப்பட்ட இந்த நிர்வாண சிலை, சிந்து சமவெளி நாகரிகத்தின் மிக முக்கியமான தொல்பொருட்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

சமீபத்தில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) ‘மதுரிமா’ என்ற கலைப் புத்தகத்தை வெளியிட்டிருந்தது.

அந்தப் புத்தகத்தில், 4,500 ஆண்டுகள் பழமையான இந்த வெண்கலச் சிலையின் நிர்வாண உடல் மற்றும் மேல் பகுதி, டிஜிட்டல் ஷேடிங் மற்றும் வண்ணங்களைப் பயன்படுத்தி மங்கலாக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, இது குறித்து கடுமையான விவாதம் எழுந்தது.

By admin