தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அருள்நிதி முதன்மையான வேடத்தில் நடித்து வரும் ‘அருள்வான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அருள்வான்’ திரைப்படத்தில் அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன், கிருத்திகா பாலா, காளி வெங்கட்,ஜோன் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். கிராமிய பின்னணியில் எளிய மனிதர்களின் வாழ்வியலை உணர்வு பூர்வமான விவரிக்கும் படைப்பாக தயாராகும் இந்த திரைப்படத்தை 90 பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ஜி. சரவணன் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்… தற்போது இதன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவான ‘டிமான்டி காலனி 3 ‘ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் இதைத் தவிர்த்து இவரது நடிப்பில் உருவான ‘மை டியர் சிஸ்டர்’ எனும் திரைப்படமும் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கிறது என்பதும் குறிப்பிடதக்கது.
The post நடிகர் அருள்நிதி நடிக்கும் ‘அருள்வான்’ படத்தின் அப்டேட் appeared first on Vanakkam London.