• Sun. Apr 26th, 2026

24×7 Live News

Apdin News

DC vs PKBS: ஒரே போட்டியில் 2 சாதனைகள் – கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியில் மிரண்ட ரசிகர்கள்

Byadmin

Apr 25, 2026



டெல்லி vs பஞ்சாப்: ஒரே போட்டியில் 2 சாதனைகள் – கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி ஆட்டம்

பட மூலாதாரம், ANI

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

டெல்லியில் இன்று (ஏப்ரல் 25) நடந்த டெல்லி கேபிட்டல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் ஐபிஎல் போட்டியில், மிகப் பெரிய டி20 சேஸை அரங்கேற்றி வெற்றி பெற்றது பஞ்சாப் கிங்ஸ்.

இதன்மூலம் இந்த சீசனில் இன்னும் ஒரு போட்டியில் கூட தோற்காத ஒரே அணியாகவும் பஞ்சாப் கிங்ஸ் வலம் வருகிறது. இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் அந்த அணி 6 வெற்றிகளைப் பதிவு செய்திருக்கிறது. ஒரு போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிட்டல்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் குவித்தது. ஆனால், அந்த ஸ்கோரை 7 பந்துகள் மீதம் வைத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பஞ்சாப் கிங்ஸ்.

மிகப் பெரிய சேஸ் என்பதைத் தவிர்த்து இந்தப் போட்டியில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டன. கேட்ச் டிராப்கள், காயங்கள் என பல மறக்கவேண்டிய தருணங்களும் இந்தப் போட்டியில் நடக்கவே செய்தன.

ஐபிஎல் வரலாற்றின் மிகப் பெரிய ரன் சேஸ்... தொடரும் பஞ்சாப் கிங்ஸ் வெற்றிப் பயணம்

பட மூலாதாரம், ANI

ராகுல் ஆடிய சாதனை ஆட்டம்

டெல்லி கேபிட்டல்ஸ் அணி பேட்டர் கேஎல் ராகுல் இந்தப் போட்டியில் 20 ஓவர்கள் முழுமையாக ஆடி, கடைசி வரை ஆட்டமிழக்காமல் 152 ரன்கள் குவித்தார். 67 பந்துகளை சந்தித்த ராகுல் 226.86 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ஆடினார். அவரது இன்னிங்ஸில் 16 பவுண்டரிகளும், 9 சிக்ஸர்களும் அடிக்கப்பட்டன.

By admin