• Thu. Jun 11th, 2026

24×7 Live News

Apdin News

நடிகர் கதிர் நடிக்கும் ‘லிங்கம்’ இணைய தொடரின் முன்னோட்டம் வெளியீடு

Byadmin

Jun 11, 2026


‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்திய நடிகர் கதிர் ஏழு அத்தியாயங்களாக நீடிக்கும் இணைய தொடரை வழி நடத்தும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘லிங்கம்’ எனும் இணைய தொடரின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த இணைய தொடர் ஜியோ ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது.

இயக்குநர் லட்சுமி சரவணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லிங்கம்’ இணைய தொடரில் கதிர், திவ்யபாரதி, போஸ் வெங்கட், பூர்ணிமா ரவி, திலீபன், ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த இணையத் தொடரை ‘விலங்கு’ தொடரை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் வழங்குகிறார். இந்த இணையத் தொடர் ஜியோ ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் தமிழ்- தெலுங்கு- மலையாளம்- கன்னடம்- மராத்தி- பெங்காலி மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

இதற்காக வெளியிடப்பட்டுள்ள முன்னோட்டத்தில்… காவல்துறையில் பணியாற்ற விரும்பும் கதையின் நாயகன் – சந்தர்ப்ப சூழல் காரணமாக கையில் ஆயுதம் ஏந்தி, சமூகத்தில் உலவும் தவறான மனிதர்களை களையெடுக்கும் பணியை மேற்கொள்வதால்… அவருடைய இலட்சியத்தை அடைந்தாரா? இல்லையா? என்பது போன்ற காட்சிகள் உணர்வு பூர்வமாகவும்… அதிரடி எக்சனாகவும் இடம் பிடித்திருப்பதால்… ‘லிங்கம்’ இணைய தொடர் மீதான டிஜிட்டல் தள பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

By admin