• Fri. Jun 12th, 2026

24×7 Live News

Apdin News

வளைகுடா பகுதியில் 20 இந்தியர்கள் இருந்த கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் – இதுவரை தெரியவந்தது என்ன?

Byadmin

Jun 11, 2026


கப்பல், இரானிய எண்ணெய், அமெரிக்கா

பட மூலாதாரம், US Centcom

படக்குறிப்பு, இந்தக் கப்பல் இரானிய எண்ணெயைக் கொண்டு செல்ல முயன்றதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

அமெரிக்கா கினியா-பிசாவு நாட்டுக் கொடியுடன் கூடிய ‘ஜல்வீர்’ என்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தியதை உறுதிப்படுத்தியுள்ளது. ஓமன் வளைகுடா வழியாக இரானிய எண்ணெயைக் கடத்த முயன்ற இந்தக் கப்பல், ‘கடல்வழி முற்றுகையை மீறியதாக’ அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக, ஓமனின் ஷினாஸ் துறைமுகம் அருகே இந்திய மாலுமிகளை ஏற்றிச் சென்ற மூன்றாவது கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக இந்தியா குற்றம் சாட்டியிருந்தது. இந்த கப்பலில் 20 இந்தியர்கள் இருந்ததாகத் தகவல் வெளியானது.

இந்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் இந்தத் தகவலைத் தெரிவித்திருந்தது.

இந்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் தகவல்

கப்பல், இரானிய எண்ணெய், அமெரிக்கா

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, முகேஷ் மங்கல், கூடுதல் செயலாளர், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம்

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் முகேஷ் மங்கல் செய்தியாளர் சந்திப்பில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

“ஜூன் 11 அன்று, கினியா-பிசாவு நாட்டுக் கொடியுடன் சென்ற ‘எம்டி ஜல்வீர்’ என்ற கப்பல், ஒமனின் ஷினாஸ் துறைமுகத்துக்கு அருகே பாதுகாப்புச் சம்பவத்தை எதிர்கொண்டது. இந்தக் கப்பலில் 20 இந்திய மாலுமிகள் உள்ளனர், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை” என்று அவர் கூறினார்.

By admin