தவெக அரசு, தமிழ்நாட்டில் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் விவரங்களை முகவரியுடன் தெளிவாக பட்டியலிட்டு, ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,
“தவெக அரசால் “மூடப்பட்டதாக” அறிவிக்கப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளில் பலவும் இன்னும் செயல்பாட்டில் இருப்பதாக தொடர்ச்சியாக புகார்கள் எழும் நிலையில், டாஸ்மாக் கடைகள் தொடர்பான கோப்பு நிலுவையில் உள்ளது எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பட்டியலை வெளியிடாமல் சப்பைக் கட்டுக் கட்டியுள்ளது மாற்று சக்தி அரசு!