• Sun. Jul 5th, 2026

24×7 Live News

Apdin News

நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

Byadmin

Jul 5, 2026


எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை ரசிகர்களிடத்தில் விளம்பரப்படுத்தும் வகையில் படக்குழு… பிரத்யேக பாடல் ஒன்றை உருவாக்கி, அதன் காணொளியை வெளியிட்டுள்ளது.

இயக்குநர் பாரி இளவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அன்பே டயானா’ திரைப்படத்தில் பாரி இளவழகன், ரம்யா ரங்கநாதன், ரோஜா செல்வமணி, சேத்தன், ‘ பரிதாபங்கள் ‘ கோபி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மில்லியன் டொலர் ஸ்டுடியோஸ் மற்றும் நியூ கேசில் கிரியேசன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வழங்குகிறது.

இப்படத்தின் பாடல்கள்- டீசர்- ட்ரெய்லர்- ஆகியவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில்… இப்படத்தினை மேலும் விளம்பரப்படுத்தும் வகையில் ‘தொக்கா மாட்டிக்கினா..’ எனத் தொடங்கும் பிரத்யேக பாடலை படக் குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை பாடலாசிரியர் சிவம் எழுதி, பாடியிருக்கிறார். மேலத்தேய தாள லயத்தில் வெளியாகி இருக்கும் இந்த பாடல் ஒரு பிரிவு ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

By admin