• Sun. Jul 5th, 2026

24×7 Live News

Apdin News

நெல்லையில் தந்தை, 5 வயது மகன் கொலையின் அதிர்ச்சி பின்னணி – கைதான 3 பேர்

Byadmin

Jul 5, 2026


இரட்டைக் கொலை

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

எச்சரிக்கை: கட்டுரையில் இடம்பெற்றுள்ள உள்ளடக்கம் சங்கடம் தரலாம்

“குளிர்பானம் குடித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட சிறு தகராறால் பல பேர் இறந்துவிட்டனர். இது தொடரக் கூடாது என சமரசம் செய்து கொண்டோம். ஆனாலும் அவர்கள் விடுவதாக இல்லை”

திருநெல்வேலியில் ஜூலை 2-ஆம் தேதியன்று தந்தை மற்றும் 5 வயது மகன் கொல்லப்பட்டது தொடர்பாக இறந்தவரின் சகோதரர் இவ்வாறு கூறியுள்ளார்.

இரட்டைக் கொலை வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிபிசி தமிழிடம் கூறிய சேரன்மாதேவி டி.எஸ்.பி, “முன்விரோதம் காரணமாக கொலைகள் நடந்ததா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்கிறார்.

திருநெல்வேலி, வீரவநல்லூர் அருகே கடந்த வியாழக்கிழமையன்று (ஜூலை 2) மாலையில் நடந்த இரட்டைப் படுகொலைகள் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

By admin