• Wed. Nov 4th, 2026

24×7 Live News

Apdin News

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘சத்தியவான் சாவித்திரி’ படத்தின் அப்டேட்

Byadmin

Nov 4, 2026


நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கும் ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சர்க்கரை பெண்ணே..’ எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் பிரவீண் எஸ். விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ,மிஷ்கின், சாருகேஷ், பால சரவணன், ஷில்பா மஞ்சுநாத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். நீதிமன்ற விசாரணை பின்னணியில் கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து இருக்கிறது.

எதிர்வரும் இருபதாம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ‘முதல் மழை தொட்டதோ.. முதல் விரல் பட்டதோ… நம் உதடுகள் சேரவே… என் கர்வங்கள் சாய்ந்ததோ.. இது புது நேசமோ… நான் அறிந்திடாத பாசமோ.. இந்த வயதினில் தோன்றிடும் ஒரு புதுவித மாற்றமோ..’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த பாடலை பாடலாசிரியர் பிரவீண் எஸ். விஜய் எழுத, பின்னணி பாடகி தீப்தி சுரேஷ் மற்றும் பின்னணி பாடகரும், இசையமைப்பாளருமான சாம் சி எஸ் ஆகியோர் இணைந்து பாடி இருக்கிறார்கள்.

காதலி- காதல் உணர்வுடன் தன் காதலனுக்கு முதல் முத்தத்தை பரிமாறிக் கொண்ட பிறகு.. அவளுள் எழும் உணர்வு ரீதியான மாற்றங்களை கவிதையாக – கவித்துவமாக வெளிப்படுத்தி இருக்கும் இந்த பாடல்….. இசை ரசிகர்களையும், கவிதை பிரியர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.

The post நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘சத்தியவான் சாவித்திரி’ படத்தின் அப்டேட் appeared first on Vanakkam London.

By admin