• Wed. Nov 4th, 2026

24×7 Live News

Apdin News

ஐந்து நிமிடத்தில் அவர் தேசவிரோதி என்று நிரூபிப்பேன்- பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவால்

Byadmin

Nov 4, 2026


நாடாளுமன்ற முடக்கம்

இந்த விவாத சவாலுக்கான இடத்தை பிரதமரே முடிவு செய்யலாம் என்றும், நடுவராக மோகன் பகவத் அல்லது தொழிலதிபர் கௌதம் அதானியை கூட அமர வைத்துக் கொள்ளலாம் என்றும் ராகுல் காந்தி கிண்டலாகக் குறிப்பிட்டார். பிரதமர் மோடி விவசாயிகளையும், சிறு குறு தொழிலதிபர்களையும் புறக்கணித்துவிட்டு, நாட்டின் ஒட்டுமொத்த நிலங்கள், உள்கட்டமைப்பு மற்றும் விமான நிலையங்களை தொழிலதிபர் கௌதம் அதானிக்கு தாரை வார்த்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசும்போது தங்களது மைக்குகள் வேண்டுமென்றே அணைக்கப்படுவதாகவும், விவாதம் நடத்த அரசு அழைப்பு விடுத்தாலும் பேசுவதற்கு உரிய வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்றும் அவர் சாடினார்.

By admin