1
நைஜீரியாவில் பொக்கோஸ் நகரில் உள்ள காவெல் கிராமத்தில் நள்ளிரவில் மர்ம கும்பலால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஸ்தலத்திலேயே 20 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆயுதமேந்திய சிலரால் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டு அப்பகுதியில் உள்ள வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த மக்கள் அலறியடித்து வெவ்வேறு திசைகளை நோக்கி ஓடியதாகவும் அவ்விதமாக தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடிய பொதுமக்கள் மீது அந்த மர்ம கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர்.
தாக்குதல் தொடர்பாக தகவலறிந்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்றபோது, தாக்குதல்தாரிகள் காட்டுப்பகுதிக்குள் தப்பிச் சென்றுவிட்டதாக அதிகாரிகள் மேலும் குறிப்பிடுகின்றனர்.
ஆபிரிக்க நாடான நைஜீரியாவின் பல இடங்களில் அண்மைக்காலமாக வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.