• Thu. Jun 25th, 2026

24×7 Live News

Apdin News

நாகூர் தர்கா: இந்து, முஸ்லிம் மத நல்லிணக்கத்தின் வரலாற்றுச் சின்னமாக மாறியது எப்படி?

Byadmin

Jun 25, 2026


நாகூர் தர்கா: இந்து, முஸ்லிம் மத நல்லிணக்கத்தின் 400 ஆண்டுக்கால வரலாற்றுச் சின்னம்

    • எழுதியவர், க. மாயகிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இந்துக்களின் தேர்த் திருவிழாக் காலங்களில் முஸ்லிம்கள் நீர் மோர் வழங்குவது, சீர்வரிசைகள் கொண்டு வருவது, அதேபோல முஸ்லிம் பண்டிகைகளுக்கு இந்துக்கள் நேரில் சென்று இனிப்புகள் வழங்கி வாழ்த்து கூறுவது போன்ற செய்திகளை தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வழக்கமாகப் பார்த்து வருகிறோம்.

ஆனால் இப்போது மட்டுமல்ல, சுமார் நான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்துக்களும் முஸ்லிம்களும் இணக்கமாக இருந்து வருவதற்குச் சான்றாக இன்றும் நிமிர்ந்து நிற்கிறது நாகூர் (மினரா) கோபுரம்.

அங்கு அமைந்துள்ள நாகூர் தர்காவுக்கு இந்துக்கள் அதிக அளவில் வருகை தருவதாக பெருமிதத்துடன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார் தர்காவின் தலைமை அறங்காவலர் ஹாஜா நஜிமுதீன் சாகிப்.

“இந்த தர்காவில் அனைத்து மதம், சமூகத்தைச் சேர்ந்தவர்களும் வருகை தந்து வழிபடுகின்றனர். தங்களது வேண்டுதல் நிறைவேறியதும் அவர்கள் அன்னதானம் செய்கிறார்கள். சிலர் காணிக்கையாக உண்டியலில் பணம் செலுத்துகின்றனர்” என்று ஹாஜா நஜிமுதீன் சாகிப் கூறினார்.

அங்குள்ள கோபுரம் நாயக்க மன்னர் காலத்திலேயே கட்டப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

By admin