உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ‘குரூப் பி’ ஆட்டத்தில், கத்தாரை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியதன் மூலம் போஸ்னியா- அந்த அணியை போட்டியில் இருந்து வெளியேற்றியதுடன், உலகக் கோப்பையில் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் வலுப்படுத்திக்கொண்டது.
இந்த வெற்றியின் மூலம், தங்கள் பிரிவில் மூன்றாம் இடத்தைப் பிடித்த போஸ்னியா இந்தத் தொடரில் ‘ரவுண்ட் ஆஃப் 32’ (Round of 32) சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்புள்ளது. மொத்தம் உள்ள 12 பிரிவுகளில் மூன்றாம் இடத்தை பிடித்த அணிகளில் சிறந்த எட்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும்.