1
தேசிய சூழல் (திருத்தச்) சட்டமூலம் 103 மேலதிக வாக்குகளினால் இன்று (24) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
சட்டமூலத்துக்கு ஆதரவாக 113 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி சட்டமூலத்துக்கு எதிராக வாக்களித்தது. சட்டமூலம் மாகாண சபைக்கு எதிரான ஏற்பாடுகளை உள்ளடக்கியுள்ளதால் தாம் எதிராக வாக்களிப்பதாக தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.
இலங்கை செய்திகள்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சட்டமூலத்துக்கு எதிராக வாக்களித்தார்.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
சட்டமூலத்தில் சிறந்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதால் தாம் சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிக்கப் போவதில்லை என்று எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக சபைக்கு அறிவித்தார்.