• Thu. Jun 25th, 2026

24×7 Live News

Apdin News

தாய்மாமன் தங்க மோதிர திட்டம்: யாருக்கெல்லாம் கிடைக்கும்? தவெக அரசுக்கு உள்ள சவால்கள் என்ன?

Byadmin

Jun 25, 2026


தமிழ்நாடு, தாய்மாமன் தங்க மோதிர திட்டம், விஜய்

பட மூலாதாரம், TamilNadu Assembly

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ.755.83 கோடி மதிப்பில் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ தொடங்கி வைக்கப்பட உள்ளதாக, ஜூன் 23ஆம் தேதியன்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

திட்டத்தின்படி, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. ‘அரசின் கடன் சுமை அதிகரித்துள்ள நிலையில், இதுபோன்ற திட்டங்களுக்குக் காலவரையறை அவசியம்’ என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் குறித்து அரசின் உத்தரவில் என்ன கூறப்பட்டுள்ளது? திட்டத்தைத் தொடர்வது சாத்தியமா?

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலின்போது தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ‘மகளிர் நலன்’ என்ற தலைப்பில் சில வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன.

அதன்படி, “தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தங்க மோதிரம், மென்மையான துணி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய ‘தாய்மாமன் சீர் பெட்டகம்’ வழங்கப்படும்” என்ற வாக்குறுதி இடம்பெற்றிருந்தது.

By admin