• Sat. Apr 18th, 2026

24×7 Live News

Apdin News

நாடாளுமன்றத்தில் தாக்கலானது தொகுதி மறுவரையறை மசோதா – எதிர்ப்பு எழுவது ஏன்?

Byadmin

Apr 16, 2026


மக்களவை

பட மூலாதாரம், Sansad TV

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

மத்திய அரசு இன்று நாடாளுமன்றத்தில் ‘தொகுதி மறுவரையறை மசோதா’வை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த மசோதா, மக்களவையில் தற்போதுள்ள 543 இடங்களின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்தப் பரிந்துரைக்கிறது.

மேலும், மக்களவையிலும் மாநிலச் சட்டமன்றங்களிலும் உள்ள மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்கை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்கான பரிந்துரையும் இதில் இடம்பெற்றுள்ளது. பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கிய, 2023-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட ‘நாரி சக்தி வந்தன் சட்டத்தின்’ அடிப்படையில் இந்தப் பரிந்துரை அமைந்திருந்தாலும், இதனை நடைமுறைப்படுத்துவது எதிர்காலத்தில் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளைச் சார்ந்தே இருக்கும்.

அதாவது, இந்தப் பரிந்துரையின்படி, மக்களவை இடங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்ட பின்னரே, பெண்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

அரசியலமைப்பு (131-வது திருத்தச் சட்டம்) மசோதா, 2026-ஐ அறிமுகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக, மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியுள்ளனர்.

By admin