• Wed. May 13th, 2026

24×7 Live News

Apdin News

நாடு முழுவதும் பால் விலையை உயர்த்தியது அமுல் நிறுவனம்!

Byadmin

May 13, 2026


இந்தியா முழுவதும் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி அமுல் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த விலை உயர்வு நாளைமுதல் (மே.14) அமலுக்கு வருகிறது.

அமுல் கோல்டு, அமுல் தாசா, அமுல் பசு பால், எருமைப் பால், அமுல் ஸ்லிம் என் ட்ரிம் என அனைத்து வகைப் பால்களுக்கும் இந்த விலை ஏற்றம் பொருந்தும்.

பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் எதிர்கொள்ளும் உற்பத்திச் செலவுகளே இந்த விலை ஏற்றத்திற்கு காரணம் என பால் கூட்டுறவு நிறுவனம் தெரிவித்துள்ளது.

By admin