• Wed. Jul 15th, 2026

24×7 Live News

Apdin News

நாட்டின் மிக உயரிய தேசிய விருதை வழங்கி இங்கிலாந்து பிரதமரை கௌரவித்த பிரான்ஸ்!

Byadmin

Jul 15, 2026


ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் உக்ரைனுக்கான ஆதரவு ஆகியவற்றில் பிரான்ஸுடன் இணைந்து பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையில், இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மருக்கு பிரான்ஸின் மிக உயரிய தேசிய விருதான ‘லெஜியன் ஆஃப் ஆனர்’ (legion d honneur france) வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதியால் இந்த விருது வழங்கப்படும் முதல் இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் ஆவார்.

2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஐரோப்பாவுக்கு ஒரு முக்கியமான கட்டத்தில் உக்ரைனுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்த நாடுகளின் கூட்டமைப்பான coalition of the willing அமைப்பை உருவாக்குவதில் ஸ்டார்மர் காட்டிய தலைமைத்துவத்துக்காக இம்மானுவேல் மேக்ரான் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விருதை அவருக்கு வழங்கினார்.

இதற்கு முன்பு இதே போன்றதொரு விருதான ‘Grand-Croix of the Légion d’honneur’ விருதை பெற்ற ஒரே இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் (Winston Churchill) ஆவார்.

இரண்டாம் உலகப் போரின் போது அவரது தலைமைத்துவம் மற்றும் பிரான்ஸுடனான நெருங்கிய உறவை அங்கீகரிக்கும் வகையில் 1958 இல் அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கு முன்னதாக, சர்வதேச அரங்கில் தனது கடைசி நிகழ்வுகளில் ஒன்றாக பாரிஸில் நடைபெற்ற பிரான்ஸின் தேசிய தினமான ‘பாஸ்டில் தின’ (Bastille Day) கொண்டாட்டங்களில் கீர் ஸ்டார்மர் கலந்துகொண்டார்.

By admin