• Fri. Oct 16th, 2026

24×7 Live News

Apdin News

நீங்கள் பேசுவதை உங்கள் செல்போன் ஒட்டுக் கேட்கிறதா? விளம்பரம் வருவது பற்றிய ஒரு பார்வை

Byadmin

Oct 16, 2026


நீங்கள் பேசுவதை உங்கள் செல்போன் ஒட்டுக் கேட்கிறதா? விளம்பரம் வருவது பற்றிய ஒரு பார்வை

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

கைப்பேசி இல்லாமல் அன்றாட வாழ்க்கையைக் கழிப்பது அவ்வளவு எளிதல்ல. இளைஞர்கள் நாளொன்றுக்கு சராசரியாக 4 மணி நேரம் 37 நிமிடங்களை கைப்பேசியைப் பயன்படுத்துவதில் செலவிடுவதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

கைப்பேசியைக் கையில் பிடித்துக்கொண்டோ, பாக்கெட்டில் வைத்துக்கொண்டோ அல்லது அருகில் வைத்துக்கொண்டோ இருக்கும்போது, அது நம்மைக் கண்காணிக்கிறதா? நமது பேச்சைக் கேட்கிறதா? இதுகுறித்து பிபிசி விரிவாக ஆராய்கிறது.

நமது பேச்சைக் கைப்பேசியால் ஒட்டுக்கேட்க முடியும் என்றும், நமது எண்ணங்களைக்கூட அதனால் அறிந்துகொள்ள முடியும் என்றும் கூறும் பதிவுகள் சமூக ஊடகங்களில் ஏராளமாகக் காணப்படுகின்றன. உதாரணமாக, ஒருவருடன் நேரில் ஒரு பொருளைப் பற்றிப் பேசினால், அதன்பின் அதுதொடர்பான விளம்பரங்கள் சமூக ஊடகங்களில் தோன்றுவதைப் பலர் சுட்டிக்காட்டுகின்றனர். உங்களுக்கும் இதுபோன்ற அனுபவம் இருக்கிறதா?

செயலிகள் மூலம் நிறுவனங்கள் தங்களைக் கண்காணிப்பதாகப் பல சமூக ஊடகப் பயனர்கள் கவலை தெரிவிக்கின்றனர். சிலர், கைப்பேசிகள் தங்களது உரையாடல்களை ஒட்டுக் கேட்பதாகவும் நம்புகின்றனர்.

ஆனால், நண்பர்களுடன் நேரில் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசிய பிறகு, அதுதொடர்பான விளம்பரம் சமூக ஊடகங்களில் தோன்றுவது தற்செயலான நிகழ்வாகவும் இருக்கலாம். இருந்தாலும், “நாம் பேசிக் கொண்டிருந்த விஷயம் தொடர்பான விளம்பரங்கள் வருவது எப்படி?” என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது; இந்தக் கேள்வி சிந்திக்க வைக்கிறது.

By admin