• Fri. Oct 16th, 2026

24×7 Live News

Apdin News

என் திட்டம்… என் திட்டம்… பொறாமை புலம்பல்: திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு ஆதவ் அர்ஜுனா பதிலடி

Byadmin

Oct 16, 2026


அரசு மருத்துவக் கல்லூரிகள்

அதுபோல ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர், நீலகிரி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 நகரங்களில் அமைந்த அரசு மருத்துவக் கல்லூரிகள் 2020-ம் ஆண்டு, முந்தைய அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் அடிக்கல் நாட்டி வேலைகள் தொடங்கப்பட்டன. 90 சதவிகித வேலைகள் முடிந்த நிலையில், 2022-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் அந்த 11 மருத்துவக் கல்லூரிகளையும் திறந்து வைத்தார். அப்போது, “கல்வியிற் சிறந்த தமிழ்நாடு” என்று மு.க.ஸ்டாலின் விளம்பரம் செய்து கொண்டார்.

கோவை மருத்துவக் கல்லூரியில் நவீன உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் JICA (Japan International Corporation Agency) பன்னோக்கு சிறப்புப் பிரிவு கட்டிடத்திற்கான வேலைகள், அந்தக் கல்லூரியின் எம்.பி.பி.எஸ் (MBBS) இடங்களை 150-லிருந்து 250 ஆக உயர்த்துவதற்காக 80 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய கல்வித் தொகுதி, விடுதிகள் மற்றும் நூலகக் கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டுவிழா, முந்தைய அ.தி.மு.க ஆட்சிக் காலத்திலேயே தொடங்கியதுதான். அவற்றில் மீதம் இருக்கும் வேலைகளை முடித்துவிட்டு, மார்ச் 2024-ல் அன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்து, அதைத் தனது ஆட்சியின் சாதனையாக சொல்லிக் கொண்டிருந்தார்.

By admin