• Thu. Aug 27th, 2026

24×7 Live News

Apdin News

நேபாளத்தில் காணாமல் போன தமிழர்களின் குடும்பத்தினர் கூறுவது என்ன?

Byadmin

Aug 27, 2026


பொற்செல்வி கோபால்
படக்குறிப்பு, பொற்செல்வி கோபால்

“அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட பிறகு அப்பாவும் அம்மாவும் ஆன்மிக பயணங்களில் ஆர்வம் காட்டினர். இந்த ஆண்டு கைலாயம் செல்வது என முடிவு செய்தனர். ஆனால், இரண்டு முறை பயண தேதி தள்ளிப் போனது” என்கிறார், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பொற்செல்வி கோபால்.

“நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து பெற்றோர் குறித்து எந்தத் தகவலும் தெரியவில்லை” என பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார்.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் சுற்றுலா நிறுவனம் மூலம் கைலாஷ் மானசரோவர் சென்ற 49 பேரில் பொற்செல்வியின் பெற்றோரும் அடங்குவர்.

நேபாளத்தில் இருந்து கைலாஷ் மானசரோவர் சென்ற இவர்கள் அங்கிருந்து திரும்பிக்கொண்டிருந்தனர்.

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

By admin