• Thu. Aug 27th, 2026

24×7 Live News

Apdin News

‘விமானத்தில் வந்த கொசு’: ஜெர்மனியில் 2 விமான நிலைய ஊழியர்கள் மலேரியாவால் உயிரிழப்பு – என்ன நடந்தது?

Byadmin

Aug 27, 2026


ஜெர்மனியில் 2 விமான நிலைய ஊழியர்கள் மலேரியாவால் உயிரிழப்பு - என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஆண்ட்ரே ரோடன்-பால் மற்றும் ஜோ கோக்லன்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

ஜெர்மனியின் மிகப் பரபரப்பான விமான நிலையமான ஃபிராங்க்ஃபர்ட் விமான நிலையத்தில் ஏற்பட்ட அரிய மலேரியா பரவல் ஏற்பட்டது. கொசுக்களால் பரவும் இந்தக் கடுமையான நோய்த்தொற்றுக்கு ஆளான ஆறு ஊழியர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்தக் கொசுக்கள் விமானம் ஒன்றின் மூலம் ஜெர்மனியின் மிகப் பரபரப்பான விமான நிலையத்துக்குள் வந்திருக்கலாம் என்று ஜெர்மன் பொது சுகாதார அதிகாரிகள் கருதுகின்றனர். இதனால் ஏற்பட்ட நோய்ப்பரவல் முதன்முதலாக ஜூலை மாதத்தில் கண்டறியப்பட்டது.

விமான நிலையத்தை நிர்வகிக்கும் ஃப்ராபோர்ட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், இந்தத் தொற்றின் காரணமாக ஒரு ஊழியர் உயிரிழந்ததாக பிபிசியிடம் தெரிவித்தார். பின்னர் புதன்கிழமை, பாதிக்கப்பட்டவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொது சுகாதார அதிகாரிகளும் தெரிவித்தனர்.

கொசுக்களை பிடிக்க விமான நிலையத்தில் பொறிகள் அமைக்கப்பட்டுள்ளன. பிடிக்கப்படும் கொசுக்கள் ஆய்வகத்தில் பரிசோதிக்கப்படவுள்ளன. கொசுக்களின் இனம் மற்றும் அவை எந்தப் பகுதியில் இருந்து வந்தன என்பது கண்டறியப்படும்.

“அனைத்து ஊழியர்களுக்கும் விரிவான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு அவர்களை ஊக்குவித்துள்ளோம்,” என்று ஃப்ராபோர்ட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.

By admin