• Sat. Sep 5th, 2026

24×7 Live News

Apdin News

நேபாளம்: கோல்டிலாக்ஸ் மண்டலம் என்றால் என்ன? சுரங்கப் பாதை மீட்புப் பணியில் அது ஏன் முக்கியம்?

Byadmin

Sep 5, 2026


கபீர் மகர்ஜன்

பட மூலாதாரம், Prime Minister’s Secretariat

படக்குறிப்பு, ஒன்பது நாட்கள் நிலத்தடியில் சிக்கியிருந்த கபீர் மகர்ஜன், திரிசூலி 3ஏ சுரங்கப் பாதையில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

(எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் சில தகவல்கள் உங்களுக்கு சங்கடம் தரலாம்.)

நேபாளம் திரிசூலி 3ஏ தளத்தில் இருந்து இருவர் உயிருடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, மூன்றாவது நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் இருந்த நேபாள மின்சார வாரியத்தின் துணை மேலாளர் சுரேஷ் ராவத், சடலத்தின் நிலை மோசமாக இருப்பதால் அது யார் என்பதை அடையாளம் காண்பது கடினமாக உள்ளதாகத் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் பிபிசியிடம் கூறுகையில், “சுரங்கப் பாதைக்குள் கண்டெடுக்கப்பட்ட சடலம் உப்பியுள்ளது, அதனால் அவர் யார் என்பதை அடையாளம் காண முடியவில்லை” என்றார்.

மேலும், “சுரங்கப் பாதையில் இருந்து தப்ப முயன்றபோது வெள்ள நீரில் சிக்கி அவர் உயிரிழந்திருக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது” என்றும் அவர் தெரிவித்தார். சுரங்கப் பாதையில் இருந்து குறைந்தபட்சம் வேறு 39 பேரையேனும் பத்திரமாக மீட்க முடியுமெனத் தாங்கள் நம்புவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

By admin