• Fri. Sep 4th, 2026

24×7 Live News

Apdin News

நேபாள பேரழிவில் சீனாவின் பங்கு என்ன? நிபுணர்கள் எழுப்பும் கேள்விகள்

Byadmin

Sep 3, 2026


2026 ஆகஸ்ட் 26 அன்று நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள திரிசூலி சந்தையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்திற்குப் பிறகு, ஆற்றங்கரையில் கட்டப்பட்ட வீடுகள் சேறு கலந்த வெள்ளநீரில் பகுதியாக மூழ்கியிருப்பது இந்தப் படத்தில் காணப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஒவ்வொரு இயற்கைப் பேரழிவிற்கும் ஒரு காரணம் உண்டு. சில வேளைகளில் தெரியாமலும், சில வேளைகளில் தெரிந்தும் அந்தக் காரணங்களை மனிதர்களே உருவாக்குகிறார்கள்.

சீனாவுடனான எல்லையில் அமைந்துள்ள நேபாளப் பகுதிகளில் குடியிருப்புகளைச் சீரழித்த இந்தப் பெருவெள்ளம், இமயமலையில் மக்களை எதிர்கொள்ளும் அதிகரித்துவரும் அபாயங்களை மீண்டும் நினைவூட்டியுள்ளது.

காலநிலை மாற்றத்தால் இந்த மலைத்தொடர் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

நேபாளத்தில் ஏற்பட்ட இந்தப் பேரழிவு வெள்ளத்திற்கான காரணத்தை இவ்வளவு விரைவாக உறுதிப்படுத்த முடியாது. ஆனால் பேரழிவுக்கு முன்பும் பின்பும் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள், திபெத்துக்கு அருகிலுள்ள லாங்டாங் லிருங் மலையின் வடபகுதியில் ஒரு பெரிய பாறைப் பகுதி சரிந்ததையும், அதன் மீது இருந்த மிகப்பெரிய பனிப்பாறைத் துண்டு உடைந்து கீழே விழுந்ததையும் காட்டுகின்றன என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

விழுந்த பாறைகள் மற்றும் கோடிக்கணக்கான கன மீட்டர் பனிக் குவியல்களின் தாக்கம் ஆரம்பத்தில் நிலநடுக்கமாகக் கருதப்பட்டது. சில மதிப்பீடுகளின்படி, அதன் ஆற்றல் பனிப்பாறை பனியை உருகச் செய்தது. அதன் விளைவாக பாறைகள், சேறு மற்றும் நீர் அடங்கிய ஒரு மிகப்பெரிய அலை போடேகோஷி பள்ளத்தாக்கு வழியாக பல மைல்கள் தூரம் நேபாளத்தின் கீழ்பகுதிகளுக்கு பாய்ந்தது.

By admin