37 தமிழர்கள் நிலை கேள்விக்குறி:
பாதிக்கப்பட்ட இந்தியர்களில் குறைந்தது 59 பேர் கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்றவர்கள் என்று ‘சம்ராட் டூர்ஸ் அண்ட் டிராவல்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தால் தகவல் தொடர்பு வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட இந்தியர்கள் குறித்த கூடுதல் விவரங்கள் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை.
தமிழ்நாட்டில் இருந்து சென்ற 57 சுற்றுலா பயணிகளில் 37 பேரின் நிலை குறித்த தகவல் இன்னும் தெரியவரவில்லை என்றும், 20 பேர் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சுற்றுலாப் பயணிகள் இமயமலையில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோயம்புத்தூரை சேர்ந்த இலாப நோக்கற்ற அமைப்பான ஈஷா அறக்கட்டளை, குடியேற்ற மையத்தில் இருந்த தங்கள் அமைப்பை சேர்ந்த 77 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ளது.