• Thu. Aug 27th, 2026

24×7 Live News

Apdin News

அரசன் படப்பிடிப்பு தளத்தில் அனிருத், சிம்பு – வைரலாகும் புகைப்படம்

Byadmin

Aug 27, 2026


நடிகர் சிலம்பரசன் நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘அரசன்.’ இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது சென்னை தரமணியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அரங்கில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், எவ்வித தொய்வும் இல்லாமல் திட்டமிட்டபடி படப்பிடிப்பு வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

படப்பிடிப்பு தளத்தில் அனிருத்:

இந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் சிலம்பரசன் டி.ஆர்., இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகிய மூவரும் சந்தித்து, படத்தின் பணிகள் குறித்து கலந்துரையாடினர். ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் இந்த மூவரின் கூட்டணி, ‘அரசன்’ படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

‘வடசென்னை’ யுனிவர்ஸுடன் தொடர்புடைய கதைக்களத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ படத்தில், சிலம்பரசன் டி.ஆர். உடன் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

அடுத்தடுத்த அப்டேட்கள்:

சிலம்பரசன் டி.ஆர். – வெற்றிமாறன் – அனிருத் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த கூட்டணி இணைந்திருப்பதே ஒரு மிகப்பெரிய ட்ரீட்டாக அமைந்துள்ள நிலையில், ‘அரசன்’ படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படப்பிடிப்பு எந்தவித இடையூறும் இன்றி தொடர்ந்து வேகமாக நடைபெற்று வருவதால், ‘அரசன்’ மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

By admin