பிரதமரின் அறிக்கை:
“தயவுசெய்து பொறுமையாக இருங்கள். உங்களின் மீட்பு, சிகிச்சை, உணவு மற்றும் தங்குமிடத்திற்கான முழு பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. இதுபோன்ற பேரிடர் காலங்களில் நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து நிற்க வேண்டும்,” என்று அவர் அறிக்கையில் தெரிவித்தார்.
மீட்பு பணிகளுக்காக நேபாள அரசு தன்னிடம் உள்ள அனைத்து வளங்களையும் திரட்டியுள்ளது என்று அவரது பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
நிவாரண பணிகளைத் தீவிரப்படுத்துவதற்காக, தேசிய பேரிடர் அபாய குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம், தேசிய மன்றம் மற்றும் அமைச்சரவை ஆகியவை அவசரகால கூட்டங்களை நடத்தின என்று அவர் மேலும் கூறினார்.