• Wed. Aug 26th, 2026

24×7 Live News

Apdin News

நேபாளத்தில் கடும் வெள்ளம் – தமிழ்நாட்டைச் சேர்ந்த 57 பேரின் நிலை என்ன?

Byadmin

Aug 26, 2026


நேபாளத்தில் கடும் வெள்ளம் - தமிழ்நாட்டை சேர்ந்த 57 பேரின் நிலை என்ன?

பட மூலாதாரம், Reuters

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 98 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேபாள சுற்றுலா வாரியம் வெளியிட்ட தகவலின்படி, 113 பேர் நேபால் நாட்டை சேர்ந்தவர்கள், 54 பேர் அமெரிக்கா மற்றும் 33 பேர் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றவர்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளைத் தொடர்புகொள்ள முடியவில்லை.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த சுமார் 57 சுற்றுலாப் பயணிகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கைலாஷ் யாத்திரரைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 57 பயணிகளும் கும்பகோணத்தை சேர்ந்த ஒரு சுற்றுலா நிறுவனம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதில் திருச்சி, சென்னை, சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், கும்பகோணம், தஞ்சாவூர், ஓசூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

ஷார்ட் வீடியோ

காணொளிக் குறிப்பு,

“மொத்தம் 57 பேர் சென்றுள்ளனர். அவர்கள் அங்கு 3 வாகனங்களில் சென்றுள்ளனர். அதில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 பேர் உள்ளனர். அவர்கள் அனைவரின் தொலைபேசியும் தொடர்புகொள்ள முடியவில்லை. அவர்களைத் தொடர்புகொண்ட பிறகே எப்படி உள்ளார்கள் என்பது தெரியவரும்” என கும்பகோணம் வட்டாட்சியர் பூங்கொடி கூறியுள்ளார்.

By admin