• Wed. Aug 26th, 2026

24×7 Live News

Apdin News

பிரகாஷ் ராஜ் நடிக்கும் ‘ஃபாதர்’ படத்தின் டீஸர் வெளியீடு

Byadmin

Aug 26, 2026


பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரகாஷ் ராஜ் – டார்லிங் கிருஷ்ணா ஆகியோர் கதையின் நாயகர்களாக உணர்வுபூர்வமான வேடங்களில் நடித்திருக்கும் ‘ஃபாதர்’ திரைப்படத்தின் டீஸர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ராஜா மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஃபாதர் ‘திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ், டார்லிங் கிருஷ்ணா, அம்ருதா ஐயங்கார், நாக பூஷணா, ரமேஷ் இந்திரா, அவினாஷ் , ஹொன்னவள்ளி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சுக்னான் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நகுல் அபயங்கர் இசையமைத்திருக்கிறார்.

தந்தைக்கும் ,மகனுக்கும் இடையேயான உணர்வுபூர்வமான உறவை மையப்படுத்தி ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆர் சி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஆர். சந்துரு-  யமுனா சந்திரசேகர் மற்றும் ஆனந்த் பண்டிட் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக தயாராகி வரும் இத்திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் தந்தைக்கும்… மகனுக்கும்… இடையேயான உறவை உணர்வுபூர்வமாக விவரிப்பதால்.. படத்தைப் பற்றிய குறைந்தபட்ச எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

By admin