• Thu. Aug 27th, 2026

24×7 Live News

Apdin News

அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்திற்கு முன்பாக அவசியம் பார்க்க வேண்டிய மார்வெல் படங்கள்

Byadmin

Aug 27, 2026


அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே: படத்திற்கு முன்பாக அவசியம் பார்க்க வேண்டிய மார்வெல் படங்கள்

பட மூலாதாரம், Getty Images

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

மார்வெல் சினிமாடிக் யுனிவெர்ஸ் அதன் அடுத்தகட்ட கிராஸ்-ஓவர் திரைப்படத்திற்குத் தயாராகி வருகிறது. டிசம்பர் 18ஆம் தேதி வெளியாகவுள்ள அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே படத்திற்கான கவுன்ட்-டவுனை மார்வெல் தொடங்கியுள்ளது.

முன்பு வெளியான அவெஞ்சர்ஸ், வகாண்டா, ஃபென்டாஸ்டிக் ஃபோர், பழைய எக்ஸ்-மென் திரைப்படங்கள் ஆகியவற்றில் வரக்கூடிய கதாபாத்திரங்கள் இந்தப் படத்தில் வருவது சமீபத்தில் வெளியான டூம்ஸ்டே டிரைலர் மூலம் உறுதியாகியுள்ளது.

ஆனால், டூம்ஸ்டே படத்தைப் பார்க்கையில், அதன் கதையோட்டத்தை தெளிவாகப் புரிந்துகொள்ள, அனைத்து எம்.சி.யு படங்களையும் ஒருவர் பார்த்திருக்க வேண்டுமா?

அடிப்படையில், மார்வெல் படங்களையும் பார்த்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும், டூம்ஸ்டே படத்தின் கதையை தெளிவாகப் புரிந்துகொள்ள, அதற்கு முன்னோட்டமாக மார்வெல் உலகில் இதற்கு முன் வெளியான சில படங்கள் மற்றும் சீரிஸை ரசிகர்கள் பார்த்திருக்க வேண்டுமென டிஸ்னி ப்ளஸ் ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதாவது, அவெஞ்சர்ஸ் அணியிலுள்ள கதாபாத்திரங்களின் தற்போதைய நிலை, மல்டிவெர்ஸ் விதிகள், எக்ஸ்-மென் உலகம், தண்டர்போல்ட்ஸ் படத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய அவெஞ்சர்ஸ் அணி, ஃபென்டாஸ்டிக் ஃபோர் என டூம்ஸ்டே கதையில் பங்கு வகிக்கப்போகும் முக்கியமான சூப்பர் ஹீரோக்களின் அடிப்படையைப் புரிந்துகொள்ள சில முக்கியமான படங்கள் மற்றும் சீரிஸ்களை பார்த்தால் போதுமானது.

By admin