• Wed. Jun 3rd, 2026

24×7 Live News

Apdin News

பசுவை தேசிய விலங்காக அறிவிக்க கோரும் முஸ்லிம் தலைவர்கள் – பாஜகவின் பதில் என்ன?

Byadmin

Jun 3, 2026


பசு வதை, மேற்கு வங்கம், பாஜக

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, உத்தரப் பிரதேச முதலமைச்சர் சமீபத்தில் பசுக்கள் தொடர்பாக பேசியிருந்தார். இதற்கிடையில், மேற்கு வங்கத்தில் உள்ள பாஜக அரசு பசுக்கள் தொடர்பான விதிகளைத் திருத்தியுள்ளது.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என முஸ்லிம் மத தலைவர்கள் வைத்துள்ள கோரிக்கைக்கு ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் பல தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனினும் அந்தக் கோரிக்கையை யாருமே ஆதரிக்கவில்லை.

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இது தொடர்பாக பேசுகையில், “பசு நமது தாய், ஒரு தாய்க்கும் மகனுக்கும் இடையே எதையும் அறிவிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.” என்றார்.

அதே வேளையில் பசுவுக்கு தேசிய விலங்கு அந்தஸ்து கொடுப்பது தொடர்பான முன்மொழிவு எதுவும் மத்திய அரசிடம் இல்லை என மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.

ஹிந்து மத தலைவர் ராம்பத்ராச்சாரியா யோகி ஆதித்யநாத்தின் கருத்தை ஆதரித்து பேசியுள்ளார். பசு வதையை தடுப்பதற்கு ஒரே வழி, “ஹிந்துத்துவ ஆதரவாளர்கள் அடுத்த மக்களவை தேர்தலில் 370 இடங்கள் பெற வேண்டும்.” என்பதே எனத் தெரிவித்துள்ளார்.

பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை அரசியல் மற்றும் பரப்புரை நோக்கத்துடன் வைக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

By admin