• Tue. Nov 3rd, 2026

24×7 Live News

Apdin News

பட்டாசு விலையில் சிவகாசிக்கும் மற்ற ஊர்களுக்கும் பெரிய வித்தியாசம் ஏன்? 80% அல்லது 90% தள்ளுபடி எப்படி சாத்தியம்?

Byadmin

Nov 3, 2026


கோவையில் 80 சதவீத தள்ளுபடி விலையில் பட்டாசு விற்கப்படும் என்று வைக்கப்பட்டுள்ள பதாகை
படக்குறிப்பு, கோவையில் 80 சதவீத தள்ளுபடி விலையில் பட்டாசு விற்கப்படும் என்று வைக்கப்பட்டுள்ள பதாகை

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

வானத்தை நோக்கி திரிசூலம் போல வேகமாகப் பறந்து சென்று வெடிக்கும் வண்ணமயமான பட்டாசு அது. அதன் பெட்டியில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச விலை (M.R.P.) ரூ.1200. கடையில் தரப்பட்ட விலைப்பட்டியலில் அதற்கு குறிக்கப்பட்டுள்ள விலை ரூ.280.

ரூ.200 என்று பெட்டியில் நிர்ணயிக்கப்பட்டுள்ள மற்றொரு வகை பட்டாசுக்கு கடையில் கூறப்படும் விலை வெறும் 40 ரூபாய்.

இந்த ஆண்டு தீபாவளிக்கு சென்னை, கோவை, மதுரை போன்ற பெரிய நகரங்களில் பட்டாசுக் கடைகளில் 80 சதவீதம், 90 சதவீதம் தள்ளுபடி என்று விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த தொகைக்கு விற்பனை செய்தாலும் தங்களுக்கு வாங்கிய விலையை 50 முதல் 100 சதவீதம் லாபம் இருக்கும் என்கின்றனர் பட்டாசு விற்பனையாளர்கள்.

அதிகபட்ச சில்லறை விலை என்பதே ஏமாற்று வேலை என்கிறார் கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் செயலாளர் கதிர்மதியோன்.

இந்த எம்ஆர்பி விலையைக் கட்டுப்படுத்த வேண்டுமென்று பட்டாசு விற்பனையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுக்கிறது.



By admin