• Tue. Oct 20th, 2026

24×7 Live News

Apdin News

பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் | உதய கம்மன்பில சீராய்வு மனு தாக்கல்!

Byadmin

Oct 20, 2026


அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசை  பாதுகாக்கும் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர்  உதய கம்மன்பில உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில் பிரதிவாதியாக சட்ட மா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார்.

தற்போது அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள குறித்த சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சில சரத்துக்கள், அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைய, குறித்த சட்டமூலத்தின் சர்ச்சைக்குரிய சரத்துக்களைச் சட்டமாக்குவதற்கு எதிர்பார்ப்பதால், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்களிப்புடன் நிறைவேற்றப்பட்டு, பொது வாக்கெடுப்பின் மூலமும் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனத் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

By admin