• Mon. Aug 17th, 2026

24×7 Live News

Apdin News

பலாலியில் காணிகளை விடுவிக்கக் கோரி கறுப்பாடை அணிந்து மக்கள் போராட்டம்!

Byadmin

Aug 17, 2026


வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில்  இன்று (16) ஞாயிற்றுக்கிழமை   ஒன்பதாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இன்றைய தினம் போராட்ட வடிவத்தை சற்று மாற்றி , பலாலி செபஸ்தியார் ஆலய முன்றலில் இருந்து, கறுப்பு மேலங்கி அணிந்து, கறுப்புக்கொடிகளை கைகளில் ஏந்தியவாறு பலாலி சந்தி வரையில் ஊர்வலமாக வந்து , பலாலி சந்திக்கு அருகில் உள்ள இராணுவ முன்னரங்கு முன்பாக கூடி , கடந்த 36 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு சில மணி நேரம் கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் பலாலி சந்தி பகுதிக்கு சென்று மதியம் வரையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

By admin