• Mon. Aug 17th, 2026

24×7 Live News

Apdin News

குஜராத்தின் கட்ச் பாலைவனத்தில் 100-க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் ஒரே திசையில் புதைக்கப்பட்டது ஏன்? வரலாறு கூறுவது என்ன?

Byadmin

Aug 17, 2026


கட்ச், இந்திய-பாகிஸ்தான் எல்லை, 100க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள், தொல்லியல்

பட மூலாதாரம், ugc

படக்குறிப்பு, கட்ச் அருகே இந்திய-பாகிஸ்தான் எல்லையில், 100க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட ஒரு தளம் கண்டறியப்பட்டுள்ளது.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

குஜராத்தின் கட்ச் பகுதியில் அமைந்துள்ள தொல்லியல் தளமான ‘தோலாவிரா’, யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரு முக்கிய இடமாகும்.

ஐயாயிரம் ஆண்டுகள் பழமையான இந்த தோலாவிரா நகரம், அக்காலத்திலேயே ஒரு நவீன ‘ஸ்மார்ட் சிட்டி’க்கு இணையான கட்டமைப்பைக் கொண்டிருந்தது என்றால் அது மிகையல்ல.

2018-ஆம் ஆண்டில், தோலாவிராவை உலகப் பாரம்பரியச் சின்னங்கள் பட்டியலில் சேர்ப்பதற்கான ஆவணங்களை இந்தியத் தொல்லியல் துறை யுனெஸ்கோவுக்கு அனுப்பி வைத்தது. குஜராத் அரசும் இந்தத் தளத்தை மேம்படுத்த குழுக்களை அமைத்தது.

வரலாற்றைப் பொறுத்தவரை, கட்ச் பகுதி தனித்துவமான தொடர்பைக் கொண்டிருப்பதுடன், பல்வேறு வரலாற்று உண்மைகளையும் வெளிப்படுத்தி வருகிறது

சமீபத்தில், இந்தியா–பாகிஸ்தான் எல்லைக்கு அருகேயுள்ள கட்ச் பாலைவனப் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் ஒரே இடத்தில் கண்டெடுக்கப்பட்டன.

By admin