• Mon. Aug 17th, 2026

24×7 Live News

Apdin News

வெற்றி ஸ்டிக்கரில் வெற்று விளம்பரம்.. பட்டாசு தொழிலை மொத்தமாக முடக்கும் தவெக அரசு – தங்கம் தென்னரசு

Byadmin

Aug 17, 2026


தங்கம் தென்னரசு

இதில் பேசிய அவர்,

“ஒரு அரசு தனது மக்களைக் காப்பதில் எந்த அளவிற்கு முன்முயற்சியுடன் செயல்பட வேண்டுமோ, அதேபோல் மக்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையாக இருக்கும் தொழிலையும் பாதுகாக்க முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இந்த வட்டாரத்தில் 6,000க்கும் மேற்பட்ட பட்டாசுத் தொழிற்சாலைகள் உள்ள நிலையில், இதன்மூலம் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பைப் பெற்று வருகின்றனர்.

ஆனால், த.வெ.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த மூன்று மாதங்களில் பட்டாசுத் தொழிலை நசுக்கும் வகையிலான நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகிறது.

கடந்த மூன்று மாதங்களில் இந்த தொழிலை நசுக்கும் நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

By admin